முகப்பு |
நெடுங் கழை |
393. குறிஞ்சி |
நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின் |
||
கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க, |
||
பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து, |
||
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின், |
||
5 |
கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி |
|
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி, |
||
நிலை கிளர் மீனின், தோன்றும் நாடன் |
||
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய, |
||
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப, |
||
10 |
நமர் கொடை நேர்ந்தனர்ஆயின், அவருடன், |
|
நேர்வர்கொல் வாழி-தோழி!-நம் காதலர் |
||
புதுவர் ஆகிய வரவும், நின் |
||
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே? | உரை | |
வரைவு மலிந்தது.-கோவூர் கிழார்
|