முகப்பு |
படு காழ் நாறிய |
278. நெய்தல் |
படு காழ் நாறிய பராஅரைப் புன்னை, |
||
அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ, |
||
பொன்னின் அன்ன தாது படு பல் மலர் |
||
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும் |
||
5 |
நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை |
|
இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்- |
||
கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி |
||
குளம்பினும் சேயிறா ஒடுங்கின; |
||
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே. | உரை | |
தோழி தலைமகட்கு வரைவு மலிந்தது.- உலோச்சனார்
|