முகப்பு |
படு நீர்ச் சிலம்பின் |
188. குறிஞ்சி |
படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக் |
||
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை, |
||
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம் |
||
மெல் விரல் மோசை போல, காந்தள் |
||
5 |
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப! |
|
'நன்றி விளைவும் தீதொடு வரும்' என, |
||
அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத் |
||
தேம் முதிர் சிலம்பில் தடைஇய |
||
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே. | உரை | |
பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
|