முகப்பு |
பளிங்கு செறிந்தன்ன |
196. நெய்தல் |
பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை, |
||
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின், |
||
மால்பு இடர் அறியா, நிறையுறு மதியம்! |
||
சால்பும் செம்மையும் உடையை ஆதலின், |
||
5 |
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின், |
|
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்! |
||
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய், |
||
சிறுகுபு சிறுகுபு செரீஇ, |
||
அறி கரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே? | உரை | |
நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த காலத்து, ஆற்றாளாகிய தலைமகள் திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது.-வெள்ளைக்குடி நாகனார்
|