முகப்பு |
பிணர்ச் சுவல் பன்றி |
336. குறிஞ்சி |
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு |
||
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின், |
||
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன், |
||
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை, |
||
5 |
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி, |
|
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட! |
||
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும் |
||
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்-அரவின் |
||
ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி, |
||
10 |
இரை தேர் எண்கினம் அகழும் |
|
வரை சேர் சிறு நெறி வாராதீமே! | உரை | |
ஆறு பார்த்துற்றுச்சொல்லியது.-கபிலர்
|