முகப்பு |
பிரசம் தூங்க |
93. குறிஞ்சி |
'பிரசம் தூங்க, பெரும் பழம் துணர, |
||
வரை வெள் அருவி மாலையின் இழிதர, |
||
கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும் |
||
மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!' எனப் |
||
5 |
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட! |
|
செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி! |
||
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள், |
||
நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள் |
||
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய |
||
10 |
பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல் |
|
மயிர்க் கண் முரசினோரும் முன் |
||
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே. | உரை | |
வரைவு கடாயது.-மலையனார்
|