முகப்பு |
புதல்வன் ஈன்ற |
355. குறிஞ்சி |
புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை |
||
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட் |
||
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை |
||
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர் |
||
5 |
செம் முக மந்தி ஆரும் நாட! |
|
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின், |
||
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்; |
||
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில் |
||
நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ |
||
10 |
என் கண் ஓடி அளிமதி- |
|
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே! | உரை | |
தோழி அருகு அடுத்தது; தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு வரைவு கடாயதூஉம் ஆம்.
|