முகப்பு |
பெருங் கடல் முழங்க |
117. நெய்தல் |
பெருங் கடல் முழங்க, கானல் மலர, |
||
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, |
||
வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன் |
||
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர, |
||
5 |
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம் |
|
கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க, |
||
புலம்பொடு வந்த புன்கண் மாலை |
||
அன்னர் உன்னார் கழியின், பல் நாள் |
||
வாழலென்-வாழி, தோழி!-என்கண் |
||
10 |
பிணி பிறிதாகக் கூறுவர்; |
|
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே. | உரை | |
வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை எதிரழிந்து சொல்லியது; சிறைப்புறமும்ஆம்.-குன்றியனார்
|