முகப்பு |
பெருந் தோள் நெகிழ |
358. நெய்தல் |
'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட, |
||
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர, |
||
இன்னேம் ஆக, எற் கண்டு நாணி, |
||
நின்னொடு தெளித்தனர் ஆயினும், என்னதூஉம், |
||
5 |
அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என, |
|
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய், |
||
பரவினம் வருகம் சென்மோ-தோழி!- |
||
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல் |
||
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம் |
||
10 |
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன, என் |
|
அரும் பெறல் ஆய் கவின் தொலைய, |
||
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே. | உரை | |
பட்டபின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்த காலத்து, தோழி, 'இவள் ஆற்றா ளாயினாள்; இவளை இழந்தேன்' எனக் கவன்றாள் வற்புறுத்தது; அக் காலத்து ஆற்றா ளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.- நக்கீரர்
|