பேணுப பேணார்

72. நெய்தல்
'பேணுப பேணார் பெரியோர்' என்பது
நாணு தக்கன்று அது காணுங்காலை;
உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்
நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிது
5
அழிதக்கன்றால் தானே; கொண்கன்,
'யான் யாய் அஞ்சுவல்' எனினும், தான் எற்
பிரிதல் சூழான்மன்னே; இனியே
கானல் ஆயம் அறியினும், 'ஆனாது,
அலர் வந்தன்றுகொல்?' என்னும்; அதனால்,
10
'புலர்வதுகொல், அவன் நட்பு!' எனா
அஞ்சுவல்-தோழி!-என் நெஞ்சத்தானே!

தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-இளம்போதியார்