முகப்பு |
மடல் மா ஊர்ந்து |
377. குறிஞ்சி |
மடல் மா ஊர்ந்து, மாலை சூடி, |
||
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் |
||
ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி, |
||
பண்ணல் மேவலமாகி, அரிது உற்று, |
||
5 |
அது பிணி ஆக, விளியலம்கொல்லோ- |
|
அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த |
||
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல, |
||
அளகம் சேர்ந்த திருநுதல் |
||
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே? | உரை | |
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தோழி கேட்ப, தன்னுள்ளே சொல்லியது.-மடல் பாடிய மாதங்கீரனார்
|