முகப்பு |
மலையன் மா ஊர்ந்து |
77. குறிஞ்சி |
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன் |
||
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர் |
||
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு |
||
உய்த்தன்றுமன்னே-நெஞ்சே!-செவ் வேர்ச் |
||
5 |
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் |
|
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல் |
||
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் |
||
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன் |
||
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை |
||
10 |
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல், |
|
திதலை அல்குல், குறுமகள் |
||
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே. | உரை | |
பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது.-கபிலர்
|