முகப்பு |
முயப் பிடிச் செவியின் |
230. மருதம் |
முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை, |
||
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை, |
||
கணைக் கால், ஆம்பல் அமிழ்து நாறு தண் போது, |
||
குணக்குத் தோன்று வெள்ளியின், இருள் கெட விரியும் |
||
5 |
கயற்கணம் கலித்த பொய்கை ஊர! |
|
முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்; |
||
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க, |
||
புதுவறம்கூர்ந்த செறுவில் தண்ணென |
||
மலி புனல் பரத்தந்தாஅங்கு, |
||
10 |
இனிதே தெய்ய, நின் காணுங்காலே. | உரை |
தோழி வாயில் மறுத்தது.-ஆலங்குடி வங்கனார்
|