முகப்பு |
முரம்பு தலை மணந்த |
374. முல்லை |
முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின் |
||
ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக் |
||
களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப, |
||
உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்! |
||
5 |
முற்றையும் உடையமோ மற்றே-பிற்றை |
|
வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல், |
||
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப, |
||
விருந்து அயர் விருப்பினள் வருந்தும் |
||
திருந்துஇழை, அரிவைத் தேமொழி நிலையே? | உரை | |
வினை முற்றி மீள்வான் இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.-வன் பரணர்
|