முகப்பு |
முழங்கு கடல் முகந்த |
347. குறிஞ்சி |
முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழை |
||
மாதிர நனந் தலை புதையப் பாஅய், |
||
ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு, |
||
வான் புகு தலைய குன்றம் முற்றி, |
||
5 |
அழி துளி தலைஇய பொழுதில், புலையன் |
|
பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டன்ன, |
||
அருவி இழிதரும் பெரு வரை நாடன், |
||
'நீர் அன நிலையன்; பேர் அன்பினன்' எனப் |
||
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி |
||
10 |
வேனில் தேரையின் அளிய, |
|
காண வீடுமோ-தோழி!-என் நலனே? | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுக்க மறுத்தது.-பெருங்குன்றூர் கிழார்
|