முகப்பு |
முழங்கு திரை... தடந்தாட் |
203. நெய்தல் |
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர், |
||
தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு |
||
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங் |
||
கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை |
||
5 |
எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு, |
|
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும் |
||
மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை |
||
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது, |
||
கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச் |
||
10 |
செய்த தன் தப்பல் அன்றியும், |
|
உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லி வரைவு கடாயது.-உலோச்சனார்
|