முழவு முகம் புலர்ந்து

360. மருதம்
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவு ஒழி களத்த பாவை போல,
நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வௌவி,
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்,
5
சென்றீ-பெரும!-சிறக்க, நின் பரத்தை!
பல்லோர் பழித்தல் நாணி, வல்லே
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப,
கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் போல, நனி பெரிது
10
உற்ற நின் விழுமம் உவப்பென்;
மற்றும் கூடும், மனை மடி துயிலே.

பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் தோழி, தலைமகள் குறிப்பறிந்து, வாயில் மறுத்தது; தலைமகள் ஊடிச் சொல்லியதூஉம் ஆம்.-ஓரம்போகியார்