முகப்பு |
யாரை எலுவ |
395. நெய்தல் |
யாரை, எலுவ? யாரே, நீ எமக்கு |
||
யாரையும் அல்லை; நொதுமலாளனை; |
||
அனைத்தால் கொண்க, நம்மிடையே நினைப்பின்; |
||
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன் |
||
5 |
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன, |
|
ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர் |
||
அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்த |
||
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக் |
||
கடல் கெழு மாந்தை அன்ன, எம் |
||
10 |
வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே. | உரை |
'நலம் தொலைந்தது' எனத் தலைவனைத் தோழி கூறி, வரைவு கடாயது.-அம்மூவனார்
|