முகப்பு |
தில்லை |
195. நெய்தல் |
அருளாயாகலோ, கொடிதே!-இருங் கழிக் |
||
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி, |
||
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும் |
||
மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே- |
||
5 |
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, |
|
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென, |
||
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் |
||
நீர் அலைத் தோற்றம் போல, |
||
ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே. |
உரை | |
களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.
|