முகப்பு |
இளம்பூதனார் |
334. நெய்தல் |
சிறு வெண் காக்கைச் செவ் வாய்ப் பெருந்தோடு |
||
எறி திரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்ப, |
||
பனி புலந்து உறையும் பல் பூங் கானல் |
||
இரு நீர்ச் சேர்ப்பன் நீப்பின், ஒரு நம் |
||
இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று |
||
எவனோ-தோழி!-நாம் இழப்பதுவே? |
உரை | |
'வரைவிடை ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - இளம் பூதனார் |