முகப்பு |
எயிற்றியனார் |
286. குறிஞ்சி |
உள்ளிக் காண்பென் போல்வல்-முள் எயிற்று |
||
அமிழ்தம் ஊறும் செவ் வாய், கமழ் அகில் |
||
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல், |
||
பேர் அமர் மழைக்கண், கொடிச்சி |
||
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே. |
உரை | |
இரந்து பின்னின்ற கிழவன் குறைமறாமல் கூறியது; பாங்கற்குச் சொல்லியதூஉம் ஆம்.- எயிற்றியனார் |