முகப்பு |
குப்பைக் கோழியார் |
305. மருதம் |
கண் தர வந்த காம ஒள் எரி |
||
என்பு உற நலியினும், அவரொடு பேணிச் |
||
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே |
||
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே; |
||
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் |
||
குப்பைக் கோழித் தனிப் போர் போல, |
||
விளிவாங்கு விளியின் அல்லது, |
||
களைவோர் இலை-யான் உற்ற நோயே. |
உரை | |
காப்பு மிகுதிக்கண், தோழி அறத்தோடு நிற்பாளாக, தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது. - குப்பைக் கோழியார். |