முகப்பு |
பெருந்தோள் குறுஞ்சாத்தன் |
308. குறிஞ்சி |
சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய |
||
அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து, |
||
மயங்குதுயர் உற்ற மையல் வேழம் |
||
உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, |
||
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் |
||
மா மலைநாடன் கேண்மை |
||
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே. |
உரை | |
வரைவிடைக் கிழத்தியை வன் சொல் சொல்லி வற்புறுத்தியது. - பெருந்தோட் குறுஞ்சாத்தன் |