முகப்பு |
பொதுக்கயத்துக்கீரந்தை |
337. குறிஞ்சி |
முலையே முகிழ்முகிழ்த்தனவே, தலையே |
||
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே; |
||
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின; |
||
சுணங்கும் சில தோன்றினவே; அணங்கு என |
||
யான் தன் அறிவல்; தான் அறியலளே; |
||
யாங்கு ஆகுவள்கொல் தானே- |
||
பெரு முது செல்வர் ஒரு மட மகளே? |
உரை | |
தோழியை இரந்து பின்னின்ற கிழவன் தனது குறை அறியக் கூறியது.- பொதுக் கயத்துக் கீரந்தை |