முகப்பு |
மிளைக்கந்தன் |
196. மருதம் |
வேம்பின் பைங் காய் என் தோழி தரினே, |
||
'தேம் பூங் கட்டி' என்றனிர்; இனியே, |
||
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர் |
||
தைஇத் திங்கள் தண்ணிய தரினும், |
||
'வெய்ய உவர்க்கும்' என்றனிர்- |
||
ஐய!-அற்றால் அன்பின் பாலே. |
உரை | |
வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது. - மிளைக் கந்தன். |