முகப்பு |
மீனெறி தூண்டிலார் |
54. குறிஞ்சி |
யானே ஈண்டையேனே; என் நலனே, |
||
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக் |
||
கான யானை கை விடு பசுங் கழை |
||
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் |
||
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- மீனெறி தூண்டிலார் |