முகப்பு |
வெண்பூதியார் |
97. நெய்தல் |
யானே ஈண்டையேனே; என் நலனே |
||
ஆனா நோயொடு கானலஃதே. |
||
துறைவன் தம் ஊரானே; |
||
மறை அலர் ஆகி மன்றத்தஃதே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வெண்பூதி |
174. பாலை |
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக் |
||
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி |
||
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும் |
||
அத்தம் அரிய என்னார், நத்துறந்து, |
||
பொருள்வயிற் பிரிவார்ஆயின், இவ் உலகத்துப் |
||
பொருளே மன்ற பொருளே; |
||
அருளே மன்ற ஆரும் இல்லதுவே. |
உரை | |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெண்பூதி |