முகப்பு |
வேம்பாற்றூர்க் கண்ணன் கூத்தன் |
362. குறிஞ்சி |
முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல! |
||
சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்; |
||
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு, |
||
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி, |
||
வணங்கினை கொடுத்திஆயின், அணங்கிய |
||
விண் தோய் மா மலைச் சிலம்பன் |
||
ஒண் தார் அகலமும் உண்ணுமோ, பலியே? |
உரை | |
வெறி விலக்கித் தோழி அறத்தொடு நின்றது. - வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன் |