முகப்பு |
யாம் எம் காமம் |
241. குறிஞ்சி |
யாம் எம் காமம் தாங்கவும், தாம் தம் |
||
கெழுதகைமையின் அழுதன-தோழி!- |
||
கன்று ஆற்றுப்படுத்த புன் தலைச் சிறாஅர் |
||
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி, |
||
ஏறாது இட்ட ஏமப் பூசல் |
||
விண் தோய் விடரகத்து இயம்பும் |
||
குன்ற நாடற் கண்ட எம் கண்ணே. | உரை | |
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர் |