முகப்பு |
யாரும் இல்லைத் |
25. குறிஞ்சி |
யாரும் இல்லை; தானே கள்வன்; |
||
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? |
||
தினை தாள் அன்ன சிறு பசுங் கால |
||
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் |
||
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே. | உரை | |
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர் |