முகப்பு |
யாவதும் அறிகிலர் |
152. குறிஞ்சி |
யாவதும் அறிகிலர், கழறுவோரே- |
||
தாய் இல் முட்டை போல, உட்கிடந்து |
||
சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே? |
||
யாமைப் பார்ப்பின் அன்ன |
||
காமம், காதலர் கையற விடினே, | உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள், 'நீ ஆற்றுகின்றிலை' என்று.நெருங்கிய தோழிக்குச் சொல்லியது. - கிள்ளிமங்கலங் கிழார் |