முகப்பு |
விரிதிரைப் பெருங்கடல் |
101. குறிஞ்சி |
விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும், |
||
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும், |
||
இரண்டும், தூக்கின், சீர் சாலாவே- |
||
பூப் போல் உண்கண், பொன் போல் மேனி, |
||
மாண் வரி அல்குல், குறுமகள் |
||
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே. | உரை | |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது; (பொருள்) வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியதூஉம் ஆம். - பரூஉ மோவாய்ப் பதுமன் |