முகப்பு |
விழுத்தலைப் பெண்ணை |
182. குறிஞ்சி |
விழுத் தலைப் பெண்ணை விளையல் மா மடல் |
||
மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி, |
||
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி, |
||
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி, |
||
தெருவின் இயலவும் தருவதுகொல்லோ- |
||
கலிழ் கவின் அசைநடைப் பேதை |
||
மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே? | உரை | |
தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது.- மடல் பாடிய மாதங்கீரன் |