முகப்பு |
வைகா வைகல் |
285. பாலை |
வைகா வைகல் வைகவும் வாரார்; |
||
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்; |
||
யாண்டு உளர்கொல்லோ?-தோழி!-ஈண்டு இவர் |
||
சொல்லிய பருவமோ இதுவே; பல் ஊழ் |
||
புன் புறப் பெடையொடு பயிரி, இன் புறவு |
||
இமைக்கண் ஏது ஆகின்றோ!-ஞெமைத் தலை |
||
ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும் |
||
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே. | உரை | |
பருவங் கண்டு வேறுபட்ட இடத்து, வற்புறுத்தும் தோழிக்கு, வன்புறை எதிரழிந்து,தலைமகள் சொல்லியது. - பூதத் தேவன் |