| முகப்பு | 
| 
கொண்கன் ஊர்ந்த | 
| 212. நெய்தல் | 
| 
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர் | ||
| 
தெண் கடல் அடை கரைத் தெளிர்மணி ஒலிப்ப, | ||
| 
காண வந்து, நாணப் பெயரும்; | ||
| 
அளிதோ தானே, காமம்; | ||
| 
விளிவதுமன்ற; நோகோ யானே. | உரை | |
| 
குறை நேர்ந்த தோழி குறை நயப்பக் கூறியது. - நெய்தற் கார்க்கியன் |