முகப்பு |
கோடு ஈர்...பாடு இல கலிழும் |
11. பாலை |
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும் |
||
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி, |
||
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே |
||
எழு, இனி-வாழி, என் நெஞ்சே!-முனாது, |
||
குல்லைக் கண்ணி வடுகர் முனையது |
||
வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர் |
||
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், |
||
வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே. |
உரை | |
தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது. - மாமூலனார் |