முகப்பு |
கௌவை அஞ்சின் காமம் |
112. குறிஞ்சி |
கௌவை அஞ்சின், காமம் எய்க்கும்; |
||
எள் அற விடினே, உள்ளது நாணே; |
||
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ |
||
நாருடை ஒசியல் அற்றே- |
||
கண்டிசின், தோழி!-அவர் உண்ட என் நலனே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஆலத்தூர் கிழார் |