முகப்பு |
நள்ளென்றன்றே |
6. நெய்தல் |
நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து, |
||
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று, |
||
நனந்தலை உலகமும் துஞ்சும்; |
||
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே. | உரை | |
வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது. - பதுமனார் |