முகப்பு |
நிழல் ஆன்று அவிந்த |
356. பாலை |
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக் |
||
கழலோன் காப்பப் கடுகுபு போகி, |
||
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த |
||
வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய |
||
யாங்கு வல்லுநள்கொல் தானே-ஏந்திய |
||
செம் பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த |
||
பாலும் பல என உண்ணாள், |
||
கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே? | உரை | |
மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது. - கயமனார.் |