முகப்பு |
நுதல் பசப்பு இவர்ந்து |
185. குறிஞ்சி |
'நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி, |
||
நெடு மென் பணைத் தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து, |
||
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும்' எனச் |
||
சொல்லின், எவன் ஆம்-தோழி!-பல் வரிப் |
||
பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி, |
||
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள் |
||
கல்மிசைக் கவியும் நாடற்கு, என் |
||
நல் மா மேனி அழி படர் நிலையே? | உரை | |
தலைமகன் இரா வந்து ஒழுகா நின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை,'வேறு பட்டாயால்' என்றாட்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |