முகப்பு |
நெஞ்சே நிறை ஒல்லாதே |
395. பாலை |
நெஞ்சே நிரை ஒல்லாதே; அவரே, |
||
அன்பு இன்மையின், அருள் பொருள் என்னார்; |
||
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே; |
||
அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போலக் |
||
களையார் ஆயினும், கண் இனிது படீஇயர்; |
||
அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில் |
||
அளிதோதானே நாணே- |
||
ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படினே! | உரை | |
வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளாகிய கிழத்தி, 'நாம் ஆண்டுச் சேறும்' எனத் தோழிக்கு உரைத்தது. |