முகப்பு |
நெடுங் கழை திரங்கிய |
331. பாலை |
நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை, |
||
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று, |
||
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் |
||
கடுங்கண் யானைக் கானம் நீந்தி, |
||
இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப் |
||
பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன |
||
நல் மா மேனி பசப்ப, |
||
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே. | உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- வாடாப் பிரமந்தன் |