முகப்பு |
நெருப்பின் அன்ன |
160. குறிஞ்சி |
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் |
||
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு, |
||
தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர் |
||
கையற நரலும் நள்ளென் யாமத்துப் |
||
பெருந் தண் வாடையும் வாரார்; |
||
இஃதோ-தோழி!-நம் காதலர் வரவே? | உரை | |
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி, 'வரைவர்' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது. - மதுரை மருதன் இளநாகன். |