முகப்பு |
நோற்றோர் மன்ற |
344. முல்லை |
நோற்றோர் மன்ற-தோழி!-தண்ணெனத் |
||
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள் |
||
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு |
||
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல் |
||
பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து, |
||
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை, |
||
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப் |
||
பிரிந்து உறை காதலர் வர, காண்போரே. | உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் கூறியது. - குறுங்குடி மருதன் |