முகப்பு |
பழ மழை பொழிந்தெனப் |
261. குறிஞ்சி |
பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய |
||
சிதட்டுக் காய் எண்ணின் சில் பெயற் கடை நாள், |
||
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான், |
||
நள்ளென் யாமத்து, 'ஐ' எனக் கரையும் |
||
அஞ்சுவரு பொழுதினானும், என் கண் |
||
துஞ்சா வாழி-தோழி!-காவலர் |
||
கணக்கு ஆய் வகையின் வருந்தி, என் |
||
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே. | உரை | |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி |