முகப்பு |
புள்ளும் புலம்பின |
310. நெய்தல் |
புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின; |
||
கானலும் புலம்பு நனி உடைத்தே; வானமும், |
||
நம்மே போலும் மம்மர்த்து ஆகி, |
||
எல்லை கழியப் புல்லென்றன்றே; |
||
இன்னும் உளெனே-தோழி!-இந் நிலை |
||
தண்ணிய கமழும் ஞாழல் |
||
தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே. | உரை | |
வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது. - பெருங்கண்ணன் |