பெருந்தண் மாரிப்

94. முல்லை
பெருந் தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே;
யானே மருள்வென்?-தோழி!-பானாள்
இன்னும் தமியர் கேட்பின், பெயர்த்தும்
என் ஆகுவர்கொல், பிரிந்திசினோரே?-
அருவி மா மலைத் தத்தக்
கருவி மா மழைச் சிலைதரும் குரலே.

உரை

பருவங் கண்டு ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடத் தலைமகள் சொல்லியது. - கதக்கண்ணன்