முகப்பு |
பெருவரை மிசையது |
78. குறிஞ்சி |
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி |
||
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி, |
||
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!- |
||
நோதக்கன்றே-காமம் யாவதும் |
||
நன்று என உணரார்மாட்டும் |
||
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே. | உரை | |
பாங்கன் தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரனார் |