முகப்பு |
மழை சேர்ந்து எழுதரு |
259. குறிஞ்சி |
மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து, |
||
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள் |
||
முகை அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல், |
||
பல் இதழ் மழைக் கண், மாஅயோயே! |
||
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும், |
||
நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல் |
||
பொய்ம் மொழி கூறல்-அஃது எவனோ? |
||
நெஞ்சம் நன்றே, நின் வயினானே. | உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி அறத்தொடு நின்று, 'யானே பரி கரிப்பல்'என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது. - பரணர். |