c
முகப்பு |
மா என மடலும் |
17. குறிஞ்சி |
மா என மடலும் ஊர்ப; பூ எனக் |
||
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப; |
||
மறுகின் ஆர்க்கவும் படுப; |
||
பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே. | உரை | |
தோழியிற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன் தோழி குறைமாறாமல் கூறியது.- பேரெயின் முறுவலார் |